55 என்ன உலகமடா? - தேமலர்ச் சோலைதனில் - ஒருநாள் சென்று புகுந்திருந்தேன் மாமரக் கூட்டமங்கே - பூத்து மாமணம் வீசியதே தென்றல் உலாவரலால் - இனிமை தேடி வரவுங்கண்டேன் ஒன்றிய நல்லமைதி - நெஞ்சில் ஓங்கிட நின்றிருந்தேன் எங்கிருந் தோஇனிய - குரலொன் றென்னைக் கவர்ந்ததுவே அங்கிருந் தேகினன்நான் - குரல்வரும் அந்தத் திசைவழியே கன்னங் கரியஉடல் - எழிலைக் காட்டும் சிவந்தகண்கள் மின்னும் அழகினையே - கண்டு மெய்மறந் தங்குநின்றேன் கன்னங் கருநிறந்தான் - எனினும் காதலிற் சிக்கிவிட்டேன் இன்னும்நீ பாடிடுவாய் - என்னை இன்பத்தில் ஆழ்த்திடுவாய் |