பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

என்னலும் அவ்விசைதான் - மீண்டும்
    எங்கும் நிறைந்ததுவே
கன்னலின் சாற்றினிமை - உவமை
    காட்டுந் தரமிலதே

யாழில் எழுமிசையோ - குழலோ
    யாதெனக் கூறிடுவேன்?
பாழுல கைமறந்தேன் - அந்தப்
    பைம்பொழில் இன்னிசையால்

அவ்விசை கேட்டொருவன் - ‘அடடா!
    அக்குயில் வாழ்க’வென்றான்
செவ்விய ஓர்கவண்கல் - மோதிடச்
    சென்று பறந்ததுவே

‘சென்று பறந்ததடா - அடவோ!
    செத்து மடிந்திருந்தால்
மென்று புசிப்பதற்கே - அக்குயில்
    மெத்தச் சுவைக்குமடா!’

என்னச் சலித்துரைத்தான் - கவண்கல்
    எய்த சிறுகயவன்
என்ன உலகமடா! - நன்மை
    எப்படி வாழுமடா!