56 சொல்லும் செயலும் - எடுப்பு சாதி தொலைந்திடச் சொலுந்தோழா - உன்பால் சாற்றிடு வேனொரு மொழிகேளாய் -சாதி தொடுப்பு வீதியில் எங்கணும் பேசி முழக்கினை வீட்டினுள் வந்ததும் பூசி வளர்த்தனை -சாதி முடிப்பு பேருக்கும் புகழுக்கும் பேசத் துடித்தாய் பேதங்கள் கண்டுள்ளம் கூசி நடித்தாய் ஊருக்கு மாத்திரம் கூறி முடித்தாய் உள்ளத்தில் இல்லத்தில் எங்கே விடுத்தாய்? -சாதி சாதியின் பேராலே வீதிகள் வைத்தாய் சங்கங்கள் ஒவ்வொரு சாதிக்கும் வைத்தாய் ஓதிடும் பள்ளியில் ஒட்டியே வைத்தாய் உண்மையில் தேர்தலில் ஓங்கிட வைத்தாய் -சாதி |