90 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
61 வள்ளலார் வழி - எடுப்பு வள்ளல் வழி நடப்பாய் - மனமே! வாழும் முறை வகுத்த ராமலிங்க -வள்ளல் தொடுப்பு உள்ளொன்றும் புறமொன்றும் உரையாடி விளையாடும் உலகோரை நாடாதே! பகல்வேடம் போடாதே! -வள்ளல் முடிப்பு சாதியினால் மதப் போதையினால் மறைச் சாத்திரத்தால் மன ஆத்திரத்தால் இந்த மேதினிமேல் பகை கொள்ளாதே இதைத் தள்ளாதே எனநமக் கறிவுரை தந்திடும் -வள்ளல் பேராசைப் படவேண்டாம் பிறர்பொருளைத் தொடவேண்டாம் பெருநெறியை விடவேண்டாம் பொய்யுரையால் கெடவேண்டாம் மாறாத மனவுறுதி சோராதே நோய்தன்னால் மாயாதே மதியிழந்து தேயாதே எனவுரைத்த -வள்ளல் |