பக்கம் எண் :

காவியப் பாவை89

60
அன்பாய் இரு!

-
எடுப்பு

எத்தனைதரம் சொல்வேன் - மனமே
எல்லாரிடமும் அன்பாய்இரு என்று

-எத்தனை

தொடுப்பு

பித்தனைப் போல் கல்லாத பேயனைப்போல் - நீ
பேசித்திரியாதே நேசித்திருப்பாயென்று

-எத்தனை

முடிப்பு

வஞ்சனைகள் செய்யாதே வாழ்வினில் பொய்யாதே
வாயில்வந்த படியெல்லாம் வாதுகள் செய்யாதே
நஞ்சனைய தீமொழிகள் நவிலாதே பிறர்பொருளை
நாடாதே நடுநிலைமை கோடாதே என்றுநான்

-எத்தனை