பக்கம் எண் :

88கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

59
ஏழை ஏது?

-
எடுப்பு

ஏழை ஏது செல்வர் ஏது - நாம்
இந்த உலகில் பிறக்கும்போது

-ஏழை

தொடுப்பு

நாளை மண்ணில் சாகும் போது
நாம் வகுத்த பேதம் ஏது

-ஏழை

முடிப்பு

இடையில் வந்த வேறு பாடே
இனியும் நின்றால் வளரும் கேடே
உடையும் உணவும் உடைமை யாவும்
உலக மாந்தர் பொதுமை யாகும்

-ஏழை

உயர்வும் தாழ்வும் பிறப்பில் ஏது
உலகில் அதனால் விளையும் தீது
துயரம் நீங்க மனிதர் யாரும்
தோழரானால் இன்பம் சேரும்

-ஏழை