92 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
63 தேடிய எழில் - எடுப்பு எழில்வாழும் இடந்தேடினேன் - நான் இரவோடு பகலாக அலைந்தோடினேன் -எழில் முடிப்பு மயில்போல நடமாடும் மடமாதர் காலிலே மயலோடும் கயல்போலும் மடவார்கண் வேலிலே -எழில் முகிலாலே முகமூடி நிலவோடும் வானிலே குகைசேரும் புலியானைக் குலம்வாழும் கானிலே -எழில் கருமேக வரைமீது கனியாடு காவிலே உருவாகி மணம்வீசி ஒளிசேரும் பூவிலே -எழில் |