பக்கம் எண் :

காவியப் பாவை93

விரிதோகை மயிலாடி
    விளையாடும் போதிலே
அரியேறு திமிரோடு
    நடைபோடும் போதிலே

-எழில்

கவிபாடும் பணிசேரும்
    கவிவாணர் நாவிலே
புவிவாழ உழுவார்தம்
    புயமேவும் ஏரிலே

-எழில்

அருகேஎன் உடனாகி
    அருள்வாழும் நெஞ்சிலே?
உறவாடி எழில்வாழ்வ
    துணராமல் எங்குமே

-எழில்