பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

64
பாப்பா பாட்டு
-

அறிவை வளர்த்திடு பாப்பா - நாட்டை
ஆளப் பிறந்தவள் நீயன்றோ பாப்பா
அறிவைக் குறைத்திடும் தாள்கள் - வாங்கி
ஆதரித் தாலிங்குத் தீமையே பாப்பா

அன்புடன் ஒற்றுமை வேண்டும் - சாதி
அகம்பாவத் தீமையை அகற்றிடல் வேண்டும்
உண்மை நெறிதனைப் போற்று - நெஞ்ச
உறுதி குறைந்திடாத் தன்மையை ஏற்று

முயற்சியில் நம்பிக்கை வேண்டும் - கெட்ட
மூடத் தனங்களைப் போக்கிடல் வேண்டும்
அயர்ச்சியே இல்லாது பாப்பா சொந்த
அருமைத் தமிழ்மொழி பயின்றிடு பாப்பா

ஒழுக்கமே உயர்வுக்கோர் ஏணி - அதைநீ
உணர்ந்து நடந்திட்டால் நாட்டுக்கோர் ஆணி
அழுக்கின்றி உடல்உள்ளம் கொண்டால் - துன்பம்
அணுகவே அணுகாது நின்னையே கண்டால்