கவியரங்கில் முடியரசன் | 127 |
சூடு தணியவில்லை சொல்லெல்லாம் தீயாக்கிப் பாடும் கவிதைகளில் பாயவிட எண்ணந்தான்; நாடு பொறுக்குமோ என்றெண்ணி நல்லஇளஞ் சூடு படக்கொடுத்தேன்; ஈதும் சுடுமென்றால் குற்றம் எனதன்று; முற்றுந் தலைவாழை பெற்ற சுவையைத்தான் பின்வாழை ஈன்றுநிற்கும்; நாநலம் கொண்டார்க்கு நல்ல சுவைநல்கும் பாநலம் வல்ல பரம்பரையில் யானொருவன் ஈனும் கனியை இருந்து சுவைக்கவிட்டு நானும் இருப்பேன் நயந்து. தலைவர்:திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் தலைப்பு:வாழையடி வாழை - பாரதியார் இடம்:சரபோசி மன்னர் கல்லூரி - தஞ்சாவூர் நாள்:21-2-1960 |