126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
நின்றிருக்கும் கல்லெல்லாம் இந்தி கண்டேன் நெடுங்கல்லாச் சுடுமண்ணா ஆகி விட்டீர்! ஒன்றுசொன்னேன் தெருவெல்லாம் தமிழ்மு ழங்க உரைத்தஎனைக் கல்லெல்லாம் சிரிக்கக் கண்டேன் சிரிப்பதற்கோ உரிமைப்போர் தொடுத்து நின்றோம்? செந்நீரும் கண்ணீரும் சிந்திக் காத்தோம்? பறிப்பதற்கோ தென்னாட்டார் உரிமை எல்லாம்? பாரதத்தின் பெயர்சொல்லி வடக்கு மட்டும் பருப்பதற்கோ? செந்தமிழ்நற் றமிழர் வாழ்ந்து பாரதமும் வாழ்கவென உணர்ந்தே சொன்னேன் மறுத்துரைத்தால் ஈரோடும் காஞ்சி யுந்தாம்* வழிசொல்லும்; புதியதொரு விதியும் செய்யும்” என்றுரைத்தான் பாரதிஎன் னெஞ்சி னுள்ளே; என்னுடலம் நடுநடுங்கி வியர்த்து நின்றேன்; ஒன்றியுளம் பற்றிநின்ற கவிஞன் சற்றே ஒதுங்கிஎதிர் நின்றுரைத்தான்; “அஞ்சி அஞ்சிப் பொன்றுமுயிர் தாங்குகின்றாய் போ! போ! மானம் போற்றுகின்ற வீரநெஞ்சாய் வா! வா! தாதன் என்றுசொல வாழ்பவனே போ! போ! சிங்க ஏறனையாய் அச்சமிலாய் வா! வா! என்றான். பஃறொடை வெண்பா முடிவுரை வாழையடி வாழைக்கு வாய்மொழியால் வீரத்தைக் கோழை மனத்திற் கொதிப்பேற்றிப் பாய்ச் சிவிட்டான்;
ஈரோடும் - காஞ்சிபுரம் - அங்குப் பிறந்த பெரியாரும் அண்ணாவும் |