கவியரங்கில் முடியரசன் | 131 |
முன்னுரை கவியரசர் முடியரசனார் அவர்கள் கடந்த 1945 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளுக்குமிடையே, நூற்றுக்கணக்கான கவியரங்க மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தவர். அந்தக் காலக்கட்டத்தில், அவர் முழங்கும் கவியரங்க மேடைகளைச் சுற்றி, அவரின் கவிமுழக்கத்தைக் கேட்க, அவர் தரும் தமிழின்பத்தை நுகர, ஆயிரக்கணக்காகத் தமிழன்பர்கள் தேனீக்களாக மொய்ப்பர். அவரது கவிமுழக்கம் கேட்டு அவையினர் மகிழ்வால் எழும் கையொலிச் சத்தம் விண்ணை முட்டிடும். அக் கவியரங்குகளில், அவர் தலைமையேற்று முழங்கிய கவிதைகள் பல அவற்றுள் சில மட்டும் இத்தொகுப்பில் இடம் தொகுத்துத் தந்துள்ளேன். இக்கவிதைகளைப் படிக்கும் பொழுது முடியரசனாரின் தமிழ் முழக்கம், சலசலக்கும் அருவியின் பேரிரைச்சலாகவும், தடையின்றி ஒடும் ஆற்றொழுக் காகவும் இருப்பதை உணரலாம். தமிழின்ப வெள்ளத்தில் நீந்தலாம். என் தந்தையார் கவியரசர் முடியரசனாரின் குரல் முழக்கம் இன்று ஓய்ந்திருக்கலாம். ஆனால், அவரின் ‘கவி முழக்கம்’ காலத்தை வென்று முழங்கும். அவரது ‘தமிழ் முழக்கம்’ என்றென்றும் ஒலித்துக் கொண்டே யிருக்கும். எந்தையின் ‘தமிழ் முழக்கத்தை’ வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தார்க்கு என் நன்றியைப் பதிவுசெய்ய வேண்டியது எனது கடமை. அன்பன், பாரி முரயரசன் முடியரசன் குடில் மனை எண் : 569 சூடாமணி நகர், காரைக்குடி - 630003 |