பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

தமிழ் வாழ்த்து

எழுத்தின்வகையெலாம்இயம்புவாய்போற்றி!

பழுத்தசொற்றிறம்பகர்வாய்போற்றி!

பொருள்கள்பற்பலஅருள்வாய்போற்றி!

யாப்பெனும்அருங்கலன்இசைப்பாய்போற்றி!

அணிகள்எழிலுறஅணிவாய்போற்றி!

போற்றிஐந்திறம்புகலும்தாயே!

- முடியரசன்