பக்கம் எண் :

140கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

கேட்டுக் கிறுகிறுத்த கேண்மையைத்தான் செப்புவனோ?
மண்ணில் நிகரில்லா மங்கையினைக் கண்டவுடன்
நண்ணித் தழுவி நலம்நுகர்ந்து வேறின்றி
‘ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவி’விழிமூடி மேலான இன்பமெனும்
காதற் சுரத்தாற் கவிஞன் தனைமறந்து
மேதக்க பாட்டிசைத்து மேல்நோக்கிச் செல்லுங்கால்
கையிற் கிடந்திருந்த காரிகையாள் தான்மறைய
ஐயவோ என்றரற்றி ஐயன் மிகப்பதறிப்30
பாட்டை முடிக்காமல் பாதியிலே விட்டுவிட்ட
பாட்டுத் திறத்தைத்தான் பாடியிங்குக் காட்டுவனோ?
கட்டுக் கதைகூறிக் காவியமாப் பாடிவைத்த
கட்டுக் கடங்காத கற்பனையைக் கூறுவனோ?
ஓங்கும் மலையருவி ஓடோடி வந்திறங்கித்
தேங்காமற் பாய்ந்து திரண்டோடும் ஆற்றினைப்போல்
வேகங் குறையாமல் வீறுற்றுப் பாட்டாகப்
போகின்ற சொல்லோட்டப் பொற்பைத்தான் சொல்லுவனோ?
கொம்பின் எருதாய்க் குயிலாய்க் குரங்காகி
நம்பி இளவரசாய் நாயகியாய்ப் பாடுவதும்40
பெண்ணாகி ஆணாகிப் பேசுங் கதைக்கிங்கே
கண்ணாகி நிற்கின்ற காவியத்தில் பங்கேற்போர்
அவ்வவராய் நின்றே அழகாகப் பேசுகின்ற
செவ்வியநற் போக்கினையும் செப்பி விளக்குவனோ?
சொல்லுங் குயிலிசைத்த சோகத்தைச் செப்புவனோ?
கொல்லுங் கொடுங்காதல் வேகத்தைக் கூறுவனோ?
நல்ல அணிநயமும் நாடும் உவமைகளும்
சொல்லின் தொடர்நலமும் சொற்செட்டுங் காட்டுவனோ?
காதற் குரங்காரைக் கண்ட குயிலங்கே