பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

எண்ணில்லாப் பிள்ளைகளை ஈன்றனரோ? அம்மக்கள்
விண்ணிற் றிரிந்து விளையாடுங் காட்சியைத்தான்
மண்ணகத்து மாந்தர் உடுவென்று மாற்றினரோ?
கண்பட்டு விட்டதென்பார் காதுக்குட் சொல்கின்றேன்;80
எத்துணைதான் இன்பம் இழைந்திழைந்து வாழ்ந்தாலும்
ஒத்தமனங் கொண்டிங் குயர்வுடனே வாழ்ந்தாலும்
ஒன்றிரண்டு பூசல் உறுவ தியல்பாகும்;
கன்றிமனங் காய்ந்து கழறுவதும் அவ்வியல்பே;
வாழுங் குடும்ப வழக்குக்கு வானத்துச்
சூழுங் குடும்பமும் சொல்லுங்கால் தப்பாது;
வானக் குடும்பத்தில் வாய்த்ததொரு பூசலினால்
தானந்தக் கூக்குரலோ? தையல் பெருங்குரலோ?
செங்கதிரோன் றன்குரலோ? செவ்விதிற் கேட்கவிலை;
பொங்கும் இடியென்று பூசி மெழுகுகின்றார்;90
வீட்டில் நடப்பதெலாம் வேற்றார் தெரியாமல்
பூட்டி மறைப்பதுதான் போற்றுங் குடும்பமென்பர்;
வாழ்ந்து வருநாளில் வான்மகள்தன் மெய்யொளியிற்
றாழ்ந்து மெலிந்து தளர்ந்து நடைபயின்றாள்;
கண்பட்டுப் போகக் கணக்கில் மகப்பெற்றாள்
புண்பட்டாள் துன்புற்றாள் பொன்மேனி வாடிவர
நோயிற் பிணிப்புண்டாள், நுண்ணிடைபோல் தேய்ந்தழகுச்
சாயல் இழந்திழந்து சாய்ந்தே மறைந்துவிட்டாள்;
காதற் கணவன் கதிரோன் மனமுடைந்து,
‘சாதல் உறுமகளே சாய்வதற்கோ தேய்ந்தனைநீ?100
நீளுலகில் என்றும் நிலைத்துநிலாப் பெண்மணியே
பாழுலகோர் நெஞ்சிற் பரிவுடனே நின்னை
நிலவுநில வென்றுரைப்பர்; நீயென்ன செய்வாய்!
நிலையாமை காட்டினைநீ; நெஞ்சத்துப் புக்கவளே,