பக்கம் எண் :

தமிழ் முழக்கம்183

நாளை பிறப்பாயோ? நான்மகிழ வாராயோ?
தோளைப் புணர்ந்தின்பச் சொல்லமுது தாராயோ?’
என்றெல்லா மேங்கி இரங்கிப் புலம்பிக்கண்
கன்றும் படியாகக் கண்ணீர் சொரிந்திருந்தான்;
விண்ணிற் கதிரோன் விடுத்தகண் ணீரினைத்தான்
மண்ணில் இருப்போர் மழையென்று கொண்டனரோ?110
இன்பமுடன் துன்பம் இணைந்ததுதான் வாழ்க்கைஎன
மன்பதையோர் எண்ணி மனங்கொண்டு வாழ்வாரேல்
நல்ல குடும்பம் நடத்தி மகிழ்ந்திடலாம்
அல்லல் சிறிதுமிலை யாம்.

தமிழ் இலக்கியப் பெருமன்றம்

இராசிபுரம்

25.9.1966