214 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
பொதுவுடைமைச் செம்புலத்துப் பெய்யும் போது புத்துலகச் செம்மைநிறம் பொருந்தி நிற்கும்; மதியுடைமைக் கார்நிலத்திற் கொட்டுங் காலை மலர்ந்திருக்குங் கருவண்ணம்; கருமை செம்மை பொதுளியநற் பூமிதனில் பொழியும் போது பூத்திருக்கும் இருவண்ணம்; மதத்திற் பெய்தால் அதனுடைய வண்ணமுமாய்க் காட்சி நல்கும்; அமரகவி பெய்ததமிழ் மழைநீ ரெல்லாம்.7 பழங்குப்பை கூளமெலாம் அடித்துச் செல்லும்; பகுத்தறிவுப் புலத்தையது குளிரச் செய்யும்; வளங்கெட்ட வறுமையுடன் செல்வ மென்று வருமேடு பள்ளமெலாம் சமப்ப டுத்தும்; விளங்குற்ற அறிவுவளம், உரிமை வேட்கை, வீரமிக்க துணிவுள்ளம், இன்னோ ரன்ன களங்கமறு நறுமலர்கள் மலரச் செய்யும் கவிஞனவன் பெய்ததமிழ் மழைநீ ரெல்லாம்.8 எங்கள்சுதந் திரதாகம் தணிவ தெந்நாள்? என்றேங்கும் பொழுதத்துத் தாகம் தீர்க்கச் சிங்கமகன் கோடைமழை யாக வந்தான்; செந்தமிழர் திருநாட்டைப் பாடும் போது பொங்கிவருங் காலமழை யாகி நின்றான்; புதுமுறையில் பாஞ்சாலி சபதம் பாடிப் பங்கமறப் பொதுநெறியில் தெய்வப் பாடற் பண்பாடி அடைமழையாய்ப் பொழிந்து நின்றான்.9 பாரதிபெய் தமிழ்மழையால் சாவா தின்னும் பாட்டுலகம் வழங்கிவரும் கார ணத்தால் *வாரமிகும் அம்மழையை அமிழ்தம் என்றே வாய்மணக்கச் சொல்லிடலாம்; பாடல் என்னும் |