பக்கம் எண் :

216கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

11
வாழும் அண்ணாமலை

ஈட்டுவதும் கூட்டுவதும் ஈட்டியதை
      வகுப்பதுவும் இயல்பாற் செய்து
காட்டியஅண் ணாமலைமன் கருணையொடு
      வாழ்ந்திருந்த கால மெல்லாம்
வேட்டெழுந்து தமிழ்மொழிக்கும் விளைபயனாம்
      கல்விக்கும் வேண்டும் மட்டும்
நீட்டியதை நாடறியும் நிறைபுலவோர்
      ஏடறியும் நெஞ்சும் சொல்லும்.

நெருஞ்சிபடர் வேட்களத்தை நிலமாக்கி,
      நகராக்கி, நிலைத்து நிற்க
அருங்கலைகள் பல்கெழுமும் கழகமென
      ஒருகோவில் ஆக்கி வைத்து
வரும்பொருளை அதுவளர வகுத்தளித்த
      கையானை வைய மெல்லாம்
தரும்புகழாற் பொலிவானை தனியண்ணா
      மலையானைத் தலைக்கொள் வோமே.

கலைமலிந்த தில்லையிலே கற்கோவில்
      தமிழரசன் கண்டான் அன்று;
கலைபலவும் திகழ்கின்ற கலைக்கோவில்
      ஒன்றின்று கண்டான் அண்ணா
மலையரசன்; அதுகண்டு கூத்தரசன்
      மனங்களித்து மன்றில் நின்று
கலையறிய ஆடுகிறான் என்றகவி
      மணிமொழியைக் கருத்தில் வைப்பாம்.