மனிதரைக் கண்டு கொண்டேன் | 239 |
தண்ணான தமிழ்மானம் தன்மானம் தழைத்துவரக் காஞ்சி தந்த அண்ணாவின் வழிநடப்பான் அருளுடையான் அன்பழகன் அவன்பேர் வாழ்க! நிலைபொறுக்க முடியாமல் நெருக்கடிகள் வந்தாலும் நெஞ்சில் நிற்கும் தலைவருக்குத் துணைநின்று தாங்குதல்தான் தார்மறவன் கடமை யாகும்; நிலைபொறுக்க இயலாதார் நேரார்பால் ஏகிடினும் நிலைத்து நின்று கலைஞருக்குத் தோள்தந்தான் கழகத்தைக் காக்கின்ற கடமை கொண்டான். கழகத்திற் புயலொன்று கடிதாக வீசுங்கால் கனியைத் தேடிப் பழமரத்து வௌவால்கள் பறந்தோடிப் போனாலும் பற்றி நிற்க விழுதுவிடும் ஆல்போல விலகாமல் அசையாமல் நிலைத்தி ருந்த அழகனவன் அன்பனவன் அவன்பேர்தான் அன்பழகன் என்றும் வாழ்க! கலைக்கழகம் பயின்றுவரும் காலத்தே இணைந்திருவர் கழகம் சேர்ந்தார் நிலைக்கின்ற பணிசெய்தார் நெடும்புகழும் பலபெற்றார் ஆனால் தீயோர் கலைக்கின்ற கூட்டத்தில் காணாமல் ஒருமனிதர் சுரந்து விட்டார் மலைப்பின்றி அன்பழகன் மதியமைச்சாய்க் கழகத்தில் வாழு கின்றான். |