242 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
அரங்கேறி முழங்குங்கால் அஞ்சாத ஐயாவின் துணிவி ருக்கும் அரங்கேறி மொழியுங்கால் அருளுடைய அண்ணாவின் கனிவி ருக்கும் அரங்கேறி இதழசைத்தால் அழகுநடை ஆரூரார் நயமி ருக்கும் அரங்கேறி நின்றாலே அரங்கிற்கே அழகுதரும் அழகன் வாழ்க! தில்லிநகர் ஆளுநர்கோ தென்னாட்டில் உலாவரஓர் திட்ட மிட்டார் குல்லுகரின் வருகைக்கு நம்வெறுப்பைக் காட்டுதற்குக் கூடிப் பேசி நல்லதொரு முடிவெடுக்க நம்பெரியார் நம்மவர்க்கோர் அழைப்பு விட்டார் ஒல்லையிலே தலைநகர்க்குப் பொதுக்குழுவின் உறுப்பினர்கள் ஓடி வந்தார். அன்றங்குப் பொதுக்குழுவில் ஐயாவை அண்ணாவை மற்றும் அங்குச் சென்றிருந்த அனைவரையும் ஆளவந்தார் சிறைசெய்தார் அதனைக் கண்டு தென்றலெனும் திரு வி க தலைமையிலே திரண்டடெழுந்தோம் அழகன் அன்று நின்றிருந்த சிங்கமென நின்றதை நாம் நினைத்தாலே புல்ல ரிக்கும். |