பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே25

8
அரசியலும் மாணவரும்

படிக்கின்ற பருவத்தைக் கல்விக் கென்றே
      பயன்படுத்திக் கொளல்வேண்டும்; அதைவி டுத்துத்
துடிக்கின்ற உணர்வுக்குத் தீனி யிட்டால்
      தொலையாத துயரந்தான் மிஞ்சி நிற்கும்;
வெடிக்கிடங்கில் எவரேனும் நெருப்பை வைத்து
      விளையாட நினைவாரோ? வேட்கை தீரக்
குடிக்கின்ற புனலூற்றை அடைத்து விட்டால்
      கொடும்வறட்சி தோன்றுமலால் வளமா தோன்றும்?

அரசியலைக் கற்றுணரும் ஆர்வம் வேண்டும்;
      அயல்நாட்டு நடைமுறையுந் தெரிதல் வேண்டும்;
புரையறுநூல் அறிவுவளம் பெற்ற பின்னர்ப்
      புகுவார்க்கே அரசியலில் வெற்றி வாய்க்கும்;
அரைகுறையாக் கல்வியினை விட்டு, மேடை
      அரசியலிற் புகுவதனாற் பயனே இல்லை;
பொருசமரில் படைக்கலங்கள் இல்லா மாந்தன்
      புகுவானேல் புறமுதுகே காட்ட நேரும்.

ஈரோட்டுப் பெரியார்தாம் என்ன கற்றார்?
      ஈடில்லாக் கலைஞரவர் என்ன கற்றார்?
பாராட்டுப் பெற்றிலரோ? என்று கேட்பர்;
      பயனில்லாக் கேள்வியிது; கல்லூ ரிக்குள்