பக்கம் எண் :

24கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

பகலிரவில் எவ்விடத்தும் கைலி யைத்தான்
      பகட்டாக மாணவரும் உடுத்து கின்றார்;
நகைமொழிக்குக் கூறவில்லை; அம்ம தத்து
      நாடாக்க அவரெல்லாம் நினைந்தார் போலும்.

நலங்கோலம் செய்கின்ற பருவம் ஈது
      நாகரிக உடையணியும் பருவம்; ஆனால்
அலங்கோலஞ் செய்தன்றோ உலவு கின்றார்;
      அழகுக்குப் பொருளொன்றும் விளங்க வில்லை;
*நலங்காத புறக்கோலம் செய்தல் ஒன்றோ
      நன்மைதரும்? அகக்கோலம் வேண்டு மன்றோ;
நலங்காணும் நாட்டத்திற் சொல்லு கின்றேன்
      நாகரிக வளங்காண முயல்க நன்றே.


நலங்காத - கசங்காத