262 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
30 என்றும் உயர்க எழில் முல்லை முல்லைச் சரத்துக்கு வெள்ளி விழாவென்னும் சொல்லைச் செவிமடுத்தேன் சொக்கிநின்றேன் - புல்லிதழை வேட்டலையும் கூட்டத்துள் வெள்ளிவிழா நாள்வரையில் நாட்டியவன் யாரென்றேன் நான். முல்லைச் சரந்தொடுப்பான் முத்தமிழ்க்குத் தீங்குவரின் சொல்லிற் சரந்தொடுப்பான் தூயனவன் - நல்லநல்ல பாட்டுந் தொடுத்திருப்பான் பாவேந்தின் பொன்னடியான் நாட்டினன்காண் என்றார் நயந்து. பொன்னடியான் வாழ்கஎனப் பூரிப்பால் நான்மொழிந்தேன் பின்னடையான் ஆள்வினையைப் பேணிநின்றேன் - நன்னடையான் என்றும்உயர்க எழில்முல்லைச் சரமென்றேன் ஒன்றும் உணர்வ்hல் உவந்து. (வெள்ளிவிழாக் கண்ட ‘முல்லைச்சரம்’ இதழுக்கு வாழ்த்து) |