பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே27

9
இதழ்களும் மாணவரும்

நூலகத்துப் புகுந்துவரக் கூசு கின்றீர்
      *நோய்நுண்மம் போற்பரவும் இதழ்கள் தம்மைப்
பாலமுதம் எனவெடுத்துப் பருகு கின்றீர்
      பகுத்தறிவைப் பாழாக்க முனைந்து விட்டீர்
காலையெனும் ஒருபொழுது விடியு முன்னே
      கயமைமிகும் இதழ்களையே வாங்கு கின்றீர்
பாலுணர்வுக் கோப்பைக்குள் வீழ்ந்து வீழ்ந்து
      படிக்கின்ற வண்டானீர் இளைஞர் இங்கே.

திரைபோட்டு நிகழ்த்துகிற செயலை எல்லாம்
      திரைநீக்கிக் காட்டுகிறார் இதழ்கள் என்றே;
திரைநீட்டிச் சங்கத்து நூல்க ளெல்லாம்
      தின்றாயே கொடுங்கடலே இவற்றை மட்டும்
இரையாக்கிக் கொள்ளாமல் இருக் கின்றாயே
      எத்துணையோ பாடல்களைச் சுவைத்த தீயே
குறைகாட்டிப் பொருளீட்டும் இதழை மட்டும்
      கொழுநாவால் தீண்டாமல் ஏன்வி டுத்தாய்?

அறிவியலை இந்நாட்டில் வளர்க்க எண்ணும்
      ஆர்வத்தால் பொருள்கொட்டி இதழ்ந டாத்த
அறிஞர்சிலர் முன்வந்தார்; ஆனால் இங்கே
      அவர்கண்ட பலனென்ன? இந்த மண்ணில்


*நோய் நுண்மம் - நோய்க்கிருமி