8 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
2 நெஞ்சு பொறுக்குதில்லையே எங்கெங்குக் காணினும் தீமையடா- உல கெங்கணும் வாய்மைகள் ஊமையடா அங்கங்கு வாழ்பவர் எள்ளினரே-குணம் அத்தனை யுங்கொண்டு தள்ளினரே தங்கடன் செய்வதில் தூங்குகிறார்- மனச் சான்றுகள் கொய்யவே ஏங்குகிறார் இங்கவர் நல்லவ ராவதெந்நாள்?-கெடும் எண்ணங்கள் யாவுமே போவதெந்நாள்? பிஞ்சு மனத்தவ ராகினுமே- கலை பேணி முதிர்ந்தவ ராகினுமே வஞ்சியர் ஆடவர் யாவருமே -படும் வாழ்வு மலர்ந்திடத் தீவினையே அஞ்சில ராகியே கூட்டுகின்றார்-அந்தோ ஆசையில் நேர்மையை வாட்டுகின்றார் நெஞ்சு பொறுப்பதற் கில்லையடா- இந்த நிலைகெட்ட மாந்தரால் தொல்லையடா ஆறறி வுள்ளவர் மாந்தரடா- விலங் காகிட ஏன்மனம் சாய்ந்ததடா? சோறது பெற்றிடத் தாழ்ந்தனரே-மனத் தூய்மையை விற்றிட வீழ்ந்தனரே |