அந்தவழி ஏகிடுவார் ஆடைகளைச் செந்துளியால் அழகு செய்வான் இந்தஒரு மடையனுக்கு மந்தையிலே திரிவதலால் இங்கென் வேலை? ஒதுங்குகிற இடமிருந்தும் உணர்வுடைய மனிதனவன் ஒதுங்க மாட்டான் மதம்படுவான் கூச்சமிலா மாடுகள்போல் நடமாடும் வழியி லெல்லாம் ஒதுங்குகிறான்; பகுத்தறியும் உணர்வில்லா உடலானுக் குடைய தற்கு? வதங்கிடுமா இவன்மேனி? வழிவிலகிப் பழகியவன் மாறான் போலும்?
|