பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

36
மனித மந்தை

ஒருவழியிற் போவென்றால் வரும்வழியிற்
      புகுகின்றான்; ஓரஞ் சென்று
தெருவழியில் நடவென்றால் தெளிவில்லான்
      நடுவழியிற் றிரிகின் றானே;
ஒருவழியுந் தேறானாய் உயர்வழியும்
      அறியானாய் ஓடு கின்றான்;
மருள்வழியே செல்கின்றான் வழிவிலகிப்
      போகின்றான் மதியுங் கெட்டான்

ஊர்திகளில் ஏறிவிடின் உரிமையவன்
      பெற்றதுபோல் ஒதுங்க மாட்டான்
யார்வரினும் இடமில்லை அப்பக்கஞ்
      செல்கவென அறிவுஞ் சொல்வான்;
நேர்மையுளான் போற்பேசும்; நிற்பவர்க்கும்
      இடங்கொடுக்க நெகிழா துள்ளம்;
போர்புரிவான் எவரேனும் புகுந்துவிடின்;
      பொதுநலமே போற்ற மாட்டான்.

உந்துகளில் ஏறுங்கால் ஒருபெரிய
      சமர்விளைப்பான் ஒழுங்கு போற்றான்;
வந்தமர்ந்து வெற்றிலையை மடித்தெடுத்துக்
      குதப்புமவன் வழியில் துப்பி