காணச்செல் திரையரங்கில் கன்னியர்தம் நடைமுறையுங் கைக லப்பும் காணக்கண் கூசுமவர் வாய்மொழிகள் கேட்பதற்குக் காது கூசும். மகளிர்க்கு வீரமிலை எனவுரைத்தால் மடமாகும்; மாளி கைக்குள் புகுதற்குள் அவர்புரியும் போர்முறைகள் பார்த்தபினர்ப் புகலல் செய்யார்; வெகுளிக்கே இலக்காகி மேலாடை உடல்நழுவி விழுதல் காணார் புகுவெற்றி கண்டதன்பின் போர்விடுப்பர் பூவைமறம் பொலிந்து வாழ்க. |