92 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
35 திரையரங்க வீரம் திரைப்படமா போர்க்களமா எனநினைக்கத் தெருவெல்லாந் திரளுங் கூட்டம் நெருக்கடியிற் சிக்குண்டு நேரிழையார் வதங்கிடினும் நிற்க மாட்டார் நரைக்கிழவர் முதலாக நல்லஇளங் குமரிவரை நாடி நிற்பார் உருப்படஓர் வழியில்லை ஒழுக்கத்தைப் புதைக்கின்றார் ஊரார் கூடி வியர்வையினால் உடல்நனைய விலையுயர்ந்த உடைகிழிய விரைந்து சென்று வெயில்நடுவே மற்றவரை வீரமிகு தோள்களினால் விலக்கித் தள்ளி அயர்விலராய்க் கூட்டத்தின் அணியுடைத்துப் புகுந்துவரும் ஆண்மை மாக்கள் செயலெல்லாம் படம்பார்க்குஞ் சீட்டொன்றைப் பெற்றிடத்தான்; வீரம் வாழ்க. நாணத்தை மானத்தை நாகரிக நங்கையர்கள் நல்ல வண்ணம் பேணித்தம் பெண்மைக்கு மதிப்புவர நடப்பதுதான் பெருமை யாகும்; |