தோற்றத்தால் நடையுடையால் தொழத்தக்க நாகரிகம் தோகை யர்க்குச் சாற்றத்தான் விழைகின்றேன் சால்புநெறி கண்டறிந்து சார்தல் வேண்டும்; ஏற்றத்தால் பெண்மகளிர் மாநாடு கூட்டிடுவோர் இழிவைச் சற்றே மாற்றத்தாம் முயல்வரெனில் மங்கையர்க்கு நலமாகும் மாண்பும் ஆகும். சரிநிகராய் வாழ்வதுதான் சரியெனவே உடன்படலில் தாழ்ச்சி யில்லை உரிமையெனும் பேர்சொல்லிப் பெண்மையையே உரிவதைநான் ஒப்ப வில்லை கரிமனத்தர் விழிவழியே கனல்புகுத ஒப்பனைகள் காட்டி யெங்குத் திரிவதுதான் உரிமையெனிற் சீறியதைச் சாய்ப்பதுதான் எனது வேலை. |