பக்கம் எண் :

90கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

நயத்தைத்தான் அவர்மனத்தில் விதைக்கத்தான்
      நாடுகிறேன்; நாணம் ஒன்றை
நயக்கத்தான் நவில்கின்றேன்; *நல்லாராய்
      வாழ்வதைத்தான் நயந்து சொல்வேன்

உள்ளாடை தெரியும்வணம் உடுத்துவதா
      நாகரிகம்? உடலிற் பாதி
**தெள்ளாகத் தெரியும்வகை சீலைகளை
      ஒதுக்குவதா சீர்த்த பண்பு
கள்ளாலே மயங்குதல்போற் கன்னியர்கள்
      இடைவயிறு காணும் வண்ணம்
தள்ளாடிச் சரிந்துவிழத் ***தானைகளைத்
      தளர்த்துவதா தாய்மைப் பண்பு?

பவளஇதழ் உடையரெனும் பாவையர்தாம்
      கற்றாளைப் பழத்தின் சாயம்
தவழஅதிற் றடவிடுவர்; தளிர்விரலில்
      வளர்நகத்தில் தகத கக்கும்
‡சிவலைநிறம் பூசிடுவர்; செம்முகத்தில்
      வெண்பொடியைத் தேய்த்து வைப்பர்;
அவரவர்தம் நிலைக்கேற்ப ஆடையெனச்
      சிறுதுணியை †அசைத்து நிற்பர்.

கடைச்சரக்கால் உடலழகு காண்பவர்க்குத்
      தெரிவுறவே கட்டி விட்டுக்
கடைத்தெருவில் திரிவதுவா கன்னியர்க்கு
      முன்னேற்றம்? கலைகள் யாவும்
படிப்பதிலே நூல்பலவும் படைப்பதிலே
      இல்லறத்துப் பாங்கு கற்று
நடப்பதிலே உயர்பதவி தொடுப்பதிலே
      முன்னேற்றம் நாட வேண்டும்.


*நல்லவராக பெண்ணாக **தெயிவாக ***ஆடை ‡சிவப்பு நிறம் †கட்டி