34 ஒப்பனை மகளிர் அழகெனுமோர் சொல்லுக்கே அமைந்தபொருள் மங்கையர்தாம் எனினும் அன்னார் *இழைமணியால் பொன்னகையால் எழில்மலரால் முகப்பொடியால் இடையிற் கட்டும் **இழைதெரியும் மெல்லுடையால் விரல்நகத்தின் ஒதுக்குவதா சீர்தத் பண்பு கள்ளாலே மயங்குதல்போற் கன்னியர்கள் சாயத்தால் இதழின் பூச்சால் ***குழைவகையால் சிறுகச்சால் கூடிவரும் எழில்காணக் கோலஞ் செய்வர். ஒப்பனைகள் பலசெய்தும் உருவத்தை அழகுறுத்தல் உலகி யற்கை; அப்பணியில் தலைசிறந்தார் அரிவையர்தாம் தனித்தன்மை அவர்க்கே யாகும்; அப்பப்ப! ஆனாலும் அவர்செய்யுங் கோலங்கள் ஆள்ம யக்கும் தப்பினையே செய்துவிடும்; தவறுகளைச் சுட்டுதற்குத் தயங்கு கின்றேன். தயக்கத்தால் கூச்சத்தால் தவறுகளைக் கண்டிக்கத் தவறி விட்டால் மயக்கத்தால் உழல்கின்ற மதியில்லார் கூட்டத்துள் வாழ்வேன் ஆவேன்;
*இழைத்துச் செய்யப்பட்ட **நூல் ***காதணி |