பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்101

50. செந்தமிழ்ச்செல்வி

கேளார் தமிழ்மொழி கேடுறச் சூழ்ந்திடுங்
      கீழ்மதியை
வாளால் அரிந்ததன் வேரைக் களைந்துநம்
      வண்டமிழைத்
*தாளால் வளர்த்தனை; தண்புனல் வார்த்தனை;
      நின்குறிக்கோள்
சூளாக் குறித்தனை; தொண்டுசெய் கின்றனை
      தூமொழியே

செல்வியுன் தாளிற் சிலம்பும் பரலும்
      செவிகுளிர
நல்கிடும் அவ்விசை நாள்முழு தும்பெற
      நாடுகின்றோம்;
மெல்விரல் நீவி மிழற்றிய யாழொலி
      போலஇதழ்
சொல்லிய பாடலிற் சொக்கிநின் றேஉனைச்
      சுற்றுதுமே.

நடைஎழில் காட்டுவை, நல்லறி வூட்டுவை,
      நாண்மலரால்
தொடைஎழில் காட்டுவை, தோகையுன் சாயலில்
      தோய்ந்துணரார்


*தாளால் - முயற்சியால்