பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்103

51. காப்புப் பருவம்

பன்னிருசீர் விருத்தம்

கலவைகள் விலகிடத் தனிமொழி உலவிடக்
       கருதிய முதல்மகனாம்
      கலைபல தெரிவுறு மறைமலை யடிகளைக்
       கருதிவ ணங்கிடுவாம்
குலமொழி அடிமுதல் தெளிவுறும் படிவளர்
       கூர்மதிப் பாவாணர்
      குளிர்மிகும் மலரடி வழிதரும் எனமனங்
       கொண்டுப ணிந்திடுவாம்.

உலகினில் முதன்முதல் நிலவிய மொழியெனும்
       உரைபெறுந் திருமகளாம்
      உயர்தனி மொழியென அயலவர் புகன்றிட
       ஒளிதரு செம்மகளாம்
அலைபல எதிரினும் நிலைபெறும் கலைமகள்
       அமுதெனும் மொழியினளாம்
      அழகிய கழகமொ டுலவிய தமிழ்மகள்
       அணிநலம் புரந்திடவே.

கதறபார் மனத்துணர்வை நற்பா படைத்துவளர்
       கவிவாணர் அடிப்பூவையும்
      கனலால் எரிந்துசிறை புகலால் மடிந்துமொழி
       கருகாது வளர்த்தோரையும்