108 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
1. தமிழ் வாழ்த்து கற்பவர் நெஞ்சில் எல்லாம் களிப்பினை ஊட்டும் தாயே! முற்படும் மொழிகட் கெல்லாம் மூத்தவள் எனினும் நின்னைப் பற்றிய இளமை குன்றாப் பைந்தமிழ் அன்னாய் என்று சொற்றிடல் தவிர வேறு பற்றுகள் இல்லேன் அம்மா! - முடியரசன் |