பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 121

செங்கதிரால் தாமரைகள் சிரித்தி ருக்கும்
      சேர்மதியால் அல்லிமலர் வாய்சி ரிக்கும்
பொங்கிவரும் மழைவரவால் பயிர்சி ரிக்கும்;
      பொய்யாத மொழிக்குறளால் புலம்சி ரிக்கும்;
துங்கமுறச் சிரித்திருக்கும் அறிவால் ஆய்ந்து
      தூயனவன் சொல்வழியில் பொதுமை காண
இங்கினிநாம் முயலுவமேல் புதுமை பூக்கும்
      புல்லடிமை தேய்ந்துசம நிலையே வாய்க்கும்.