120 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
7. பூக்கட்டும் புதுமை நெறிபிறழா உழைப்பதனைப் பெருக்கி நின்றால் நேரியநல் லுரிமைகளை வழங்கல் வேண்டும்; உரிமைகளைப் பறித்தடக்க எண்ணு வீரேல் உணர்ச்சிகளே பொங்கிஎழும் புரட்சி ஓங்கும்; சரிபிழைகள் தெரியாத நிலைமை தோன்றும்; சமர்வருமுன் பெருகட்டும் உரிமை யாவும் சொரிமழைபோல் பொழியட்டும் உழைப்பை மாந்தர்; சுடர்விட்டு மிளிரட்டும் நமது நாடு சிரிக்கட்டும் மக்களெலாம் மகிழ்வு கொள்வோம்; சிரிப்பளவில் நில்லாமல் உழைப்பைக் கொஞ்சம் பெருக்கட்டும்; பெருகியதாற் பெற்ற இன்பம் பெருகட்டும் நிலைக்கட்டும்; சோம்ப லைத்தான் முறிக்கட்டும்; முறிக்கியபின் உழைப்பு நாட்டில் முளைக்கட்டும்; முளைவிடுமேல் வாழ்வும் ஓங்கும்; இருக்கட்டும் நமக்கென்ன என்றி ருந்தால் இனிக்கெட்டுப் போவதலால் வழியே இல்லை. பூக்கின்ற மலர்களெலாம் பூக்கள் அல்ல புதியனவாய் வருவவெலாம் புதுமை அல்ல ஈர்க்கின்ற மணம்பரப்பும் மலர்க ளைத்தாம் எல்லாரும் போற்றிடுவர்; நலம்ப ரப்பிக் காக்கின்ற புதுமையைத்தான் ஏற்பர் சான்றோர்; காகிதப்பூப் போல்வீரியும் புதுமை எல்லாம் போக்குதலே அறிவுடைமை; மயங்கி நின்று புதுமைஎனும் பேராலே வீழ்தல் வேண்டா. |