புதியதொரு விதிசெய்வோம் | 119 |
6. பொதுமை காண்போம் பதினான்கு சீர் விருத்த்தம் வறுமை மிக்கு வலிமை கெட்டு வறியார் வாடும் போதிலே வலியர் மட்டும் வளமை யுற்று வளர்வ தென்ன நீதியோ? பொறுமை யற்றுப் புலிநி கர்த்துப் பொதுமை காணும் போரிலே புரட்சி தோன்றும் புதிய போக்கில் புரளி என்ன நேருமோ? இருமை போக ஒருமை காண *இறைவன் சொற்ற பாட்டிலே இடரி லாத வழிகள் காண இறங்கி வாரும் நாட்டிலே வறுமை போக வளமை சேர வழிகள் யாவை? தேடுவோம் வளரும் நாடு பொதுமை யாகி வாழ்க என்று பாடுவோம்.
* இறைவன் = வள்ளுவன் |