118 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
5. ஏர்நின்றால்..... நாடாள்வோர் செங்கோலும் உழவன் ஏந்தும் நலமிக்க கோலைத்தான் நோக்கி நிற்கும்; வீடாளும் இல்லறத்து மாந்தர் தாமும் விளைவுசெயும் உழவனைத்தான் நோக்கி நிற்பர்; கூடாது வாழ்க்கையென வெறுத்த காவிக் கோலத்தர் துறவுக்கும் அவனே காவல்; ஓடாமல் ஏர்நின்றால் உலகம் நிற்கும் உலகளிக்கும் இறைவனுக்கும் பூசை நிற்கும். ஏர்நடக்கப் பார்நடக்கும்; இல்லை என்றால் எதுநடக்கும்? பசிநடக்கும் பிணிந டக்கும் போர்நடக்கும் கொலைநடக்கும் பொய்ந்ந டக்கும் பொல்லாத அத்தனையும் நடக்கும் அன்றோ? சீர்நடத்தும் பாவலன்றன் செய்யுள் எல்லாம் *செய்யுள்நடும் உழவனுக்குப் பின்பாட் டாகும்; கூர்தொடுத்த ஏர்முனைக்குப் பின்னே சென்று கும்பிட்டுத் திரிந்தேதான் உலகம் வாழும். கவியரங்கம் செய்யாறு 17.1.1969
*செய்யுள் = வயல் |