| 124 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
10. துன்பத் துடிப்பு விரல்துடித்தால் யாழ்நரம்பில் இசையைக் கூட்டும்; விறலியரின் கால்துடித்தால் நடனங் காட்டும்; திறல்படைத்த சிற்பியின்கை உளிது டித்தால் தேவரையுங் கல்லுக்குள் அடக்கிக் காட்டும்; அருள்பழுத்த கலைஞன்றன் மனந்து டித்தால் அரியகலை பலகாட்டும்; சிந்தித் தாயும் திறல்படைத்த சிந்தனையார் மனந்து டித்தால் சீர்மைமிகும் புத்துலகைப் படைத்துக் காட்டும். கற்பனையில் உலவுகவி மனத்து டிப்பால் கனவுலகம் உருவாகும்; இல்ல றத்தைக் கற்கவரும் காதலர்கள் மனத்து டிப்பால் கருவுலகம் உருவாகும்; பள்ளி சென்று கற்பவரின் அளவில்லா மனத்து டிப்பால் கலகங்கள் உருவாகும்; ஒழுக்கக் குன்றில் நிற்பவர்தம் மனத்துடிப்பால் நலங்கள் எல்லாம் நிலமெங்கும் உருவாகும் தீமை தேயும். துன்பத்தில் நெஞ்சங்கள் துடிப்ப துண்டு தொடர்கின்ற இன்பத்தும் துடிப்ப துண்டு துன்பத்தின் துடிப்பாலே புரட்சி தோன்றும்; துடிக்கின்ற இன்பத்தில் மருட்சி தோன்றும்; துன்புற்று மக்களினம் துடித்தால் எங்கும் துவள்கின்ற நெஞ்சத்தில் நெருப்பு மூளும் மின்பற்றி விளையாடும் வாளும் வேலும் மிடைந்திருக்கும் ஆட்சிகளும் எரிந்து வீழும். |