புதியதொரு விதிசெய்வோம் | 125 |
தன்மனையின் காற்சிலம்பை விற்க வந்த தப்பறியாக் கோவலனைக் கள்வன் என்றான்; பொன்செய்யும் கொல்லனுரை நம்பி நின்றான்; புகழ்க்கருணை மறவனுக்குத் தீங்கு செய்தான்; பொன்செய்யும் வேலுடையான் பாண்டி மன்னன் புகார்விட்டு வந்தான்மேல் புகாரு ரைத்தான் என்னுமொழி செவிப்படலும் கண்ண கித்தாய் இடர்ப்பட்டாள் கொதித்தெழுந்தாள் கனலாய் நின்றாள். ‘குறையில்லாக் கோவலனோ கள்வன்? என்றன் கொழுநனுக்கோ வீண்பழிகள்? சொல்வார் பேச்சைச் சரியென்று நம்புவதோ அரச நீதி சமன்செய்யும் கோல்போல நடுநின் றோராக் குறைமதியன் நாடாளும் மன்ன னோ?இக் கொடுமைக்கே சாவுமணி அடிப்பேன்’ என்றே எரிகின்ற நெஞ்சத்தே துடிது டித்தாள் இருந்தஇடந் தெரியாமல் சாய்ந்த தாட்சி. 13.5.1978 |