126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
11. தீ பரவட்டும் வயலிருந்தும் வயல்பாய நீரி ருந்தும் வருந்தாமல் நீர்பாய்ச்சி உழைக்கும் நல்ல செயலிருந்தும் அச்செயலால் விளைவி ருந்தும் சேர்த்துவைத்த நெல்முதலாப் பொருளி ருந்தும் மயலுறவும் செயலறவும் மாந்தர் வாடி வாயுணவுக் கின்னலுறச் செயற்கைப் பஞ்சம் புயலெனவே புகுந்ததனால் அவர்வ யிற்றிற் பொங்கியெழுந் தெரிந்ததுவே பசித்தீ பற்றி. வெள்ளையனும் நமக்குரிமை தந்து விட்டு வெளிப்போந்தான் ஆதலினால் ஆங்கி லத்தால் எள்ளளவும் செந்தமிழ்க்குத் தீமை யில்லை இனியதமிழ் அரியணையில் அமரும் என்றே உள்ளமதிற் பொங்கிஎழும் ஆர்வங் கொண்டோம்; ஒற்றுமையாம் பொதுமொழியாம் என்று கூறிப் பிளளைமதி படைத்தவரோ இந்தி ஒன்றே பேணுகிறார் எரிமலைபோல் வெடித்த துள்ளம் உரிமைநமக் கெய்தியதால் இனிமேல் வாழ்க்கை உயர்ந்துவிடும் வளம்பெருகும் கவலை யில்லை சரிநிகராய் வாழ்ந்திடுவோம் உயர்வு தாழ்வு சாதியிலும் பொருள்தனிலும் எதிலும் இல்லை அரசியலும் நடுநின்று பொதுமை பேணும் அடிமைமிடி இலையென்றே கனவு கண்டார்; புரியகிலாய் பகற்கனவாய்ப் போன தாலே பொங்கியவர் விழிகளெலாம் செந்தீ செந்தீ. |