பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 127

சோறுபெறாக் காரணத்தால் வயிறு பற்றிச்
      சுடர்த்தெழுந்த பசித்தீயும் ஆள வந்தார்
ஊறுபெறச் செந்தமிழை அழிக்க வேண்டி
      உன்னுவதால் உருத்தெழுந்த உள்ளத்தீயும்
மாறுபடும் ஆட்சியினால் அல்ல லுற்ற
      வறியவர்தம் விழித்தீயும் கொடுங்கோல் தன்னை
நீறுபடச் செய்யட்டும் செங்கோ லாட்சி
      நிலவட்டும் பரவட்டும் அந்த முத்தீ.