128 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
12. தமிழர் திருநாள் தைபிறக்க வழிபிறக்கும் என்பர் மேலோர்; தமிழகத்து வழிவகுக்க வந்தாய் பொங்கல்! பொய்யுறக்கம் கொள்கின்ற தமிழர் இந்நாள் பொங்கிஎழுத் தாற்பகைமை தூள்தூள் ஆகும், செய்புரக்கும் உழவோரே செங்கோல் தாங்கிச் செந்தமிழ ஆட்சியினைச் செய்வர், நம்மோர் கைசிறக்கும் கலைசிறக்கும் தொழில்சி றக்கும் காலமெலாம் களிசிறக்கும் தமிழ்சி றக்கும். |