பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

28. பொங்கல் விழா

எண்சீர் விருத்தம்

கருநீலங் குழைத்தெடுத்துக் கரைத்து, ஞாலம்
      கண்ணுக்குப் புலனாகா வண்ணம் பூசிப்
பொருள்யாவும் மறைத்ததுபோல் உலகில் யாண்டும்
      புகுந்ததனை விழுங்கிவரும் இருளின் கூட்டம்
மருளோடு வெருண்டொடச் செய்து, கீழை
      வான்வெளியைச் சிவப்பாக்கிப் புதிய ஆட்சி
உருவாக்கி, விழித்தெழுந்தோர் நெஞ்ச மெல்லாம்
      உவப்பாக்கிச் செங்கதிரோன் தோன்றக் கண்டேன்

சிறைவிடுத்துச் சிறைவிரித்துச் செவ்வான் கண்டு
      சிந்தைகளி கூர்ந்துபல விந்தை செய்து
உறைவிடத்துக் கிளைகடோறும் ஓடிஆடி
      ஒலியெழுப்பும் புள்ளினைப்போல் என்றன் பிள்ளை
திரையுடுத்த துகில்விரித்த அணைவி டுத்துச்
      சிறுவிழியின் இமைவிரித்துச் சிரித்தெ ழுந்து
குறைகுடத்துப் புனலொளிபோல் வாயால் நாவாற்
      குரலெழுப்பித் தள்ளாடி திரியக் கண்டேன்.

செங்கதிரின் முகங்கண்டு பொய்கை தன்னில்
      செவ்விதழ்தா மரைமுகமும் மலர்தல் போலப்
பொங்கிவரும் மகிழ்ச்சியினால் என்னை நோக்கிப்
      பூங்கொடியின் இடையுடையாள் துணைவி நல்லாள்
துங்கமுகம் மலர்ந்தொளிர முறுவல் பூத்தாள்;