பக்கம் எண் :

192கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

அம்புவிமாந்தர்ஆழ்துயில்கொண்டனர்;
மடமைகள்இன்னும்மறையவில்லை;
கடவுளர்கதைகள்கலையவுமில்லை;
சமயப்பூசல்சரியவுமில்லை;
இமயம்குமரிஇடைப்படுநாட்டில்
தொலைந்ததாகசாதி?தொலையவேஇல்லை
தேர்தல்என்றொருசேதிவருமெனில்
ஊர்வலமாகஉலாவரும்சாதி
தமிழ்தான்எங்குந்தழைத்ததாஎன்றால்
உமியளவேனும்உயரவேஇல்லை;
வானொலிப்பெட்டிவாயைத்திறந்தால்
வீணொலி,விளங்காவெற்றொலிமுழங்கும்
சுப்பிரபாதம்சுருதிகள்ஸ்மிருதிகள்
தப்பினால்இந்திதடபுடாஒலிகள்,
தியாகராசர்தெலுங்கிசைக்கீர்த்தனை
இப்படிப்புரியாஇசையொலிகேட்கும்;
எப்படிப்பொறுப்போம்?இதுதமிழ்நாடாம்!
தமிழகக்கோவிலுள்தலையைநீட்டின்
தமிழொலிஅங்கேதவழ்ந்திடக்காண்கிலம்
இனமெனப்பாராதெதிரெதிர்நின்று
முனிவுறும்ஞமலியின்முறைப்பொலிபோலக்
கரகரஒலியேகாதில்விழும்;
திருமணமுறையிலும்தெரியாமொழிதான்;
எங்குநோக்கினும்எரிச்சலேமிஞ்சும்;
பொங்கிஎழும்நாள்புரட்சிவரும்நாள்
இங்கேதோன்றினால்எம்மவர்விழிப்பர்;
பாடிஎழுப்பிற்பயனேஇல்லை;
சாடிஎழுப்பின்சற்றேவிழிப்பர்.
பொங்குகபுரட்சிபொங்குகஎழுச்சி
எங்கணும்இன்பம்தங்குகஇனிதே.

பாவலர் மன்றம்,
ஈரோடு
12.1.1980