வீடென்ன மனையென்ன மக்க ளென்ன வீணுக்கு வாழ்வென்ன பதவி என்ன நாடென்ன மொழியன்னை நலியும் போது? நாமென்ன மரமென்று நினைந்தார் போலும்? *ஓடென்ன மெலிந்தென்ன? நரம்பி லெல்லாம் ஓடுவது புண்ணீரா? செந்நீர் வெள்ளம்; ஈடென்ன கண்டதுண்டு தமிழ்மொ ழிக்கே? ஈந்திடுவோம் நம்முயிரை; வாகை கொள்வோம்.
* ஓடென்ன - ஓடுபோல |