என்னுடன் உன்னைக் கூட்டி இணைத்தனன் எவனோ வந்து பின்னுமென் னுடைமை யெல்லாம் பிடுங்கினை! என்றன் தாய்க்கும் இன்னலே செயநி னைந்தால் இனியுமுன் தொடர்பெ தற்கு? சொன்னதும் பிரிந்து போபோ சுடுமொழி தோன்று முன்னே என்சொலைக் கேட்டு நெஞ்சுட் சீறினை! என்ன செய்வாய்? வஞ்சனை பலவும் செய்வாய் வழக்குகள் தொடுத்து நிற்பாய் வெஞ்சிறைக் கூட மென்று வெருட்டுவாய் அடபோ பேதாய் அஞ்சினேன் என்றால் என்றன் அன்னையைக் காப்ப தெங்கே? 10.3.1987 |