92 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
மயற்படும் மாந்தர்தம் மதிதான் என்னே! இந்நிலை நிலவிய இம்மா நிலத்தில் அந்நாள் வெண்பொன் முந்நூ றளித்திட இயற்றமிழ் மதிப்பை ஏற்றிய புலவன், செயற்றிறம் புரிந்து செந்தமிழ் வளர்த்தவன், கொள்கையிற் பிறழாக் குணக்குன் றவனைக் கள்ளவிழ் மலர்கொடு கைகுவித் தேத்துவம்; மறைமலை என்னும் மறையா மலையை நிறைதர நெஞ்சினில் நிறுத்துவம் யாமே; செறிபுகழ்ச் செந்தமிழ் செழித்திட அவன்றன் நெறியறிந் தொழுகுவம் நிலைபெறும் பொருட்டே. 27.11.1976 |