110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
1 வேலைச் சுழற்றுங்கள்! வேதனையை நீக்குங்கள்!! நாட்டில் இயங்கிவரும் நாலுவகைக் கட்சிக்கும் ஆட்டுந் தலைவருண் டாடிவருந் தொண்டருண்டு; தன்மானக் கட்சிக்குந் தக்க தலைவருண்டு; அன்பான தொண்டர் அளவில்லா வீரருண்டு; தொண்டர் தலைவரெனச் சொல்லளவில் நின்றாலும் அண்டும் ஒருகுடும்பம் ஆனதுதான் நம்கழகம்; ஐயா எனவுரைத்தும் அண்ணா என அழைத்தும் மெய்யான பற்றுளத்தால் மேம்பட்டு நின்றவர் நாம்; அண்ணா என அழைப்போம் அன்புள்ள தம்பீஎன் றண்ணன் நமையழைப்பான்; அவ்வண்ணம் நாமிருந்தோம்; நூலொன்றால் கோத்தமைத்த நூறு வகைமணிகள் போலொன்றி நல்லுறவு பூண்டு வளர்ந்தவர் நாம்; ஒன்றாக்கி நின்ற உறவுநூல் எப்படியோ நன்றாக்குந் தோழர்க்குள் நாலாறு கூறுபட்டுக் கட்டவிழ்ந்து வெவ்வேறாய்க் காணும் மணிபோல ஒட்டுறவே யின்றி உதிர்ந்துகிடக் கின்றோம்; உறவு முறைகாண உள்ளவன்நான் வேறு வரவு முறைகாண வந்து புகவில்லை; ஆதலினால் நம்கழகம் அல்லற் படும்போது வேதனை கொள்கின்றேன்; மீண்டும் உறவுமுறை |